இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியவற்றில் நிலவும் சுமார் 7,500 வெற்றிடங்களை நிரப்புவதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இம்முறை விண்ணப்பங்கள் இணையத்தளம் ஊடாக உத்தியோகபூர்வ இணையத்தளம்: www.police.lk மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பங்களை எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் அல்லது அன்றைய தினத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.
