ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பின்னால் சவூதி அரேபியா உள்ளதாக அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த ஒரு மாதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பலமுறை தொலைபேசியில் ரகசியமாகப் பேசியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.மேலும், இந்த உரையாடல்களின் போது, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை ராணுவ ரீதியாகத் தகர்க்க வேண்டியது அவசியம் என்று அவர் ட்ரம்ப்பை வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
அதே போல இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் சவுதி இளவரசர் ஆகிய இருவரின் தொடர் வறுபுறுத்தலே , அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியைக் குறிவைத்துத் தாக்க உத்தரவிடக் காரணம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா தனது வான்வெளியை ஈரான் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்த விடமாட்டோம் என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தது. இந்த சூழலில் இந்த செய்தி வெளியானதன் மூலம் சவுதி அரேபியா இரட்டை வேடம் போடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியோடு ஈரான் மீது தாக்குதலில் ஈரானின் அதிஉயர் தலைவர் கமேனி (Ali Hosseini Khamenei) கொல்லப்பட்டமை உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
