முள்ளிவாய்க்கால் ஓலங்களே ஈரானின் இன்றைய அழிவு; பழிவாங்கும் கர்மா ; நின்று கொல்லும் தெய்வம்!

மஹிந்த அரசாங்கத்துடன் கைகோர்த்து , 2009 இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் ஈரானின் பங்கு மிகப் பெரியது ஆகும். அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது பொஇத்துபோகவில்லை.

இன்று ஈரானின் அழிவு என்பது அதனையே மெய்ப்பித்து நிற்கின்றது. எந்தெந்த நாடுகள் எல்லாம் மஹிந்த அரசுடன் கைகோர்த்து ஈழத்தமிழர்களை இனவழிப்பு செய்ய முற்படார்களோ அந்த நடுகள் எல்லாம் இன்று உயிர் பலிகளை கொடுத்துகொண்டிருக்கின்றது.ஈழபோரின் 2009 மேமாதம் 18 ஆம் திகதி இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இனவழிப்பு செய்து முடித்தபோது ஒரு சில நாடுகளை தவிர பிற நாடுகள் மௌனமாக வேடிக்கை பார்த்தன ஈரான், இலங்கை அரசிற்கு ஆதரவு கொடுத்து எம்மை அழித்ததோடு, ஈரானால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் தமிழர்களின் உயிர்களைக் கொன்று குடித்தது.

சொந்த மண்ணில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்து மகிழ்ச்சி அடைந்தவர்கள், அதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களை வழங்கி உதவியவர்கள், இப்போது தமக்குள்ளே மோதி அழிந்து கொண்டிருக்கின்றார்கள்.சர்வதேச நீதிமன்றம், ஐ. நா சபை வழங்க மறுத்த நீதியினை இன்று போரில் கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் ஆன்மாக்கள் கதறிதுடித்ததை இன்று கர்மா வழங்கிக்கொண்டிருக்கின்றது.

செத்துமடிந்த எம்மவர்களின் ஓலங்கள் அப்போது யார் செவிக்கும் எட்டவில்லை போலும், அதனால் தான் இன்று இறைவன் அவர்களுக்கான தண்டனையை வழங்கிகொண்டிருக்கின்றான்.

நாட்டில் போர் வெற்றி கொண்டாடங்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் இன்று அதே மக்களால் நிராகரிக்கப்பட்டு பல்லை பிடுங்கிய பாம்புகள் போல முடங்கி கிடக்கின்றார்கள். அவர்களுக்கு உதவிய, ஈரான், உக்ரைன் போன்ற நாடுகள் இன்று தம் மக்களை போரில் காவு கொடுத்துகொண்டிருக்கின்றன. 

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.