சட்டத்தரணி ஒருவரின் இரகசிய ஆவணங்களை திருடி, வங்கி கணக்கிலிருந்து சுமார் 4 கோடியே 88 இலட்சம் (48,805,275.00) ரூபாயை அதிரடியாகக் கொள்ளையடித்த பாரிய மோசடி அம்பலமாகியுள்ளது!
ஒரு சட்டத்தரணிக்குச் சொந்தமான முக்கிய ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, வங்கியிலிருந்த பெருந்தொகைப் பணத்தை இந்தக்கும்பல் சுருட்டியுள்ளது. இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதி விசாரணைப் பிரிவு 03-க்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மின்னல் வேக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த மோசடிப் பின்னணியில் இருந்த இருவரை CID நேற்று (17) அதிரடியாகக் கைது செய்தது.
📌வெள்ளவத்தை பெண் (53 வயது) - மோசடிக்குத் திட்டமிட்டு ஆவணங்களைப் பயன்படுத்தியவர்.
📌வங்கி உதவி முகாமையாளர் (45 வயது) - மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த இவர், வங்கி நடைமுறைகளை மீறி இந்தத் திருட்டிற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கொழும்பு 02 பகுதியில் வைத்து கைதானார்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் இன்னும் பெரிய புள்ளிகள் இருக்கிறார்களா என்பது குறித்து CID மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
உங்கள் பணமும் வங்கியும் பாதுகாப்பானதா? வங்கி அதிகாரிகளே இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
