அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களின் இரண்டாவது நாள் இன்றாகும் (01). ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் 47 ஆண்டுகால வரலாற்றையே புரட்டிப்போடும் வகையில், அதன் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி தெஹ்ரானில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலேயே படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்த இராணுவ நடவடிக்கை ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எட்டியுள்ளது.
இந்த தொடர் தாக்குதல்கள் மூலம் ஈரானிய ஆட்சிமுறை குறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறைகளின் திறன், மற்றும் தனது உயர் அதிகாரிகளை பாதுகாப்பதில் ஈரானிய இராணுவத்தின் இயலாமை உலகிற்கு வெளிச்சம் பெற்றுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய தலைமைத்துவத்திற்கு இது தனது இருப்பைத் தீர்மானிக்கும் போராட்டமாக உள்ளது.
அரசியல் ஆய்வாளர்கள் கருத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்போதைய ஈரானிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக அந்நாட்டு மக்களை தூண்டிவருவதாகவும், ட்ரம்ப் இதை "தலைமுறைகளுக்குப் பிறகு கிடைத்த ஒரே வாய்ப்பு" என வர்ணித்துள்ளார்.பொருளாதார நெருக்கடி மற்றும் மதகுருமார்களின் ஆட்சி மீதான அதிருப்தி ஈரானிய மக்களில் இன்னும் நீடித்து வருகிறது.
முன்னதாக ஒடுக்கப்பட்ட போராட்டங்களுக்குப் பிறகும், தற்போதைய சூழல் மக்கள் மத்தியில் மாற்றத்துக்கான எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.
எவ்வாறாயினும், ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தற்போதைய தலைமைத்துவத்திற்கு விசுவாசமாகவே உள்ளது.
கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றாலும், கடந்த கால மோதல்களில் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக ஈரானிய படைகள் எந்த அளவிற்கு திறம்பட பதிலடி கொடுக்க முடியும் என்பது தெளிவாக இல்லை.
ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கையிட்டபடி, ஈரான் கடுமையான தாக்குதலை முன்னெடுத்தால், "இதற்கு முன்னர் ஒருபோதும் காணாத அளவிலான பேராற்றலை" எதிர்கொள்ள நேரிடும். இத்தொடர் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
