O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக

 ஹோமாகம, பிட்டிப்பனை பிரதேசத்தில் வசித்து வந்த இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த பதினாறு வயது பாடசாலை மாணவியின் சடலம் ஒன்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மாணவி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் கல்வி கற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு ; மீட்கப்பட்ட கடிதம் | Student Takes Tragic Step Before Exam

சம்பவம் நடந்த அன்று இரவு அவர் தனது மூத்த சகோதரியுடன் ஒரே அறையில் உறங்கச் சென்றுள்ளார், இரவில் திடீரென விழித்த சகோதரி, இளைய மகள் படுக்கையில் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அவர் உடனடியாக தனது தந்தைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் வீட்டிலுள்ளவர்கள் தேடியபோது வீட்டின் பின்புறம் சமையலறைக்கு அருகில் சடலம் தொங்கிக்கொண்டிருப்பதை தந்தை கண்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் உடனடியாகச் செயல்பட்ட தந்தை மாணவியை ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்த போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த மரண விசாரணையின் போது இறந்த மாணவியால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு கடிதமும் உறவினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.