காவல்துறை தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த தேநீர் கொடுக்க முயன்றதற்காக 22 வயது காதலி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொண்டு வந்த சாண்ட்விச்சில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மாத்திரையையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுநீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவரது காதலி என்று கூறப்படும் சந்தேக நபர் நேற்று (22) மதியம் இளைஞரைப் பார்க்க வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காதலனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, காவல்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் அவர் வெளியேறி, ஒரு சிறிய மெழுகுப் பையுடன் காவல் நிலையத்திற்குத் திரும்பினார்
அதில் ஒரு தேநீர் கோப்பை, ஒருசாண்ட்விச் ஆகியவை இருந்தன. OIC க்கு கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் கொண்டு வந்த தேநீர் கோப்பை மற்றும் சாண்ட்விச்சைப் பரிசோதித்தபோது, அவற்றில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
