உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
மீண்டும் வரிசை யுகமா-நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்-சற்று முன் வெளியான அறிவிப்பு
நாட்டில் எரிவாயுவிற்கான வரிசை தோற்றம் பெற்று வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு, கண்டி, காலி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு இரண்டிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு அருகில் மிக நீணட வரிசையில் மக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தையில் தற்போது கிடைக்கும் எரிவாயுவின் அளவு மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும், சில வர்த்தகர்கள் பற்றாக்குறையைப் பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இருப்பினும், சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு இருப்பு ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறப்பிடத்தக்கது.