ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்த மற்றுமொரு பெண்ணின் அருகில் இருந்த பொருள்

களுத்துறை, அகலவத்தை, திரிவணகெட்டிய பகுதியில் வீடொன்றிலிருந்து காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (01) காலை தோட்ட வீடொன்றிலிருந்து இவ்வாறு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திரிவணகெட்டிய தோட்டத்தை சேர்ந்த பி. லெச்சமி (74) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மர்மமாக உயிரிழந்த பெண் - சடலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் | Woman Body With Injuries Found In Kalutara

ஆம்புலன்ஸ் சேவைக்கு பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, அங்கு சென்றபோது, ​​குறித்த பெண் உயிரிழந்துவிட்டதாக சந்தேகித்து, பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கண்டுபிடிக்கப்பட்ட உடலுக்கு அருகில் எரிவாயு சிலிண்டர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில்,களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.