இலங்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் பயங்கரவாத சட்டத்துக்கு ஏதுவான புதிய சட்டம் அறிமுகமாக உள்ளது.
அது தொடர்பான மக்கள் கருத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சினால் கோரப்பட்டுள்ளது
ஆகவே இதனை வாசித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள் 28.02.2026 முன்பு தெரிவியுங்கள்.
நூற்றுக்கு 99 வீதம் பழைய பயங்கரவாத தடைச்சட்டமாக இருந்தாலும் சரி சில மாறுதல்களை கொண்டு வர்ணப்பூச்சு பூசப்பட்டிருந்தாலும் சரி அது தமிழர்கள் மீதே மிக வன்மமாக பிரயோகிக்கப்படும்.
ஆகவே தமிழர்கள் இந்த சட்ட நுணுக்கங்களை அறிந்து வைத்திருத்தல் மிக கட்டாயமானதொன்றாகும்.
தமிழ் அரசியல்வாதிகள் இது குறித்து இன்னும் வாய் திறக்காது மௌனம் காத்து வருகிறார்கள்.
இன்னும் சொற்ப கால எல்லைக்குள் இந்த புதிய பயங்கரவாத தடை சட்டத்தை நிராகரித்து மக்கள் விழிப்படைய வேண்டும்.
கடந்த கால பயங்கரவாத சட்டத்தை விட இதில் தமிழர்களுக்கு எதிரான மற்றும் மிக தந்திரமான விதிமுறைகளை தீர்மானித்திருக்கிறார்கள் என பிரபல தமிழ் சட்டத்தரணிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
அரசுக்கு எதிராக செயற்பட்டாலோ-எழுதினாலோ அதுவும் பயங்கரவாதமாக கருதப்படும் என்கிறது இப் புதிய வர்ணம் பூசி மெருகேறிய சட்டம்.
பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் அரசியல்வாதிகள் விழித்து கொண்டு இந்த அநுர அரசின் இந்த புதிய சட்ட மூலத்தை அவசரமாக எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்குண்டு.
இவ் சட்டம் நிறைவேறினால் சத்தமாக இயற்கை வாயு எம்மில் இருந்து வெளியேறினால் கூட கைது செய்யப்படலாம்.
எனவே தமிழர்கள் ஆகிய நாம் இவ் சட்டத்தை முழுமையாக வாசித்து எதிர்ப்பை தெரிவியுங்கள்.
தமிழில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை அழுத்தி வாசிக்கவும்-உங்கள் கருத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சிற்கு அனுப்பி வைக்கவும்.
கீழே சட்டங்கள் இணைக்கப் பட்டுள்ளன
தமிழ் மொழி முலம்
https://www.moj.gov.lk/images/Careers/2025/Bills/12-12/Terrorsim-BillT.pdf
ஆங்கில மொழி மூலம்
https://www.moj.gov.lk/images/Careers/2025/Bills/12-12/Terrorsim-BillE.pdf.pdf
