ஈரானிய புரட்சிகர காவற்படைக்கு சொந்தமான ட்ரோன் பற்றிய தகவல்கள் மையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அமெரிக்காவின் "ஆபிரகாம் லிங்கன்" என்ற விமானம் தாங்கிக் கப்பல் நிலைகொண்டுள்ள பகுதியில் ஈரானிய ட்ரோன் குறிவைத்து தாக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரானிய தரப்பிலிருந்து வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், "ஷாஹெட் 129" என்ற தாக்கப்பட்ட ஈரானிய ட்ரோன், சர்வதேச கடல் பகுதியில் அதன் நிரந்தர மற்றும் சட்டப்பூர்வ பணியை மேற்கொண்டு வருகின்றது. அது அங்கு உளவு, கண்காணிப்பு மற்றும் படப்பிடிப்பு செயல்பாடுகளைச் செய்து வருவதாகவும், இது ஒரு வழக்கமான மற்றும் சட்டபூர்வமான நடைமுறையாகக் கருதப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன் அதன் உளவு படங்கள் மற்றும் கண்காணிப்புத் தரவை மையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பியதாகவும் பின்னர் தகவல் தொடர்பு இழப்பை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த ஈரானிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்த F-35 போர் விமானத்தை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, ஈரானின் இந்த உளவு விமானத்தை தாக்க அமெரிக்கா ஏன் இத்தகைய சக்திவாய்ந்த விமானத்தை பயன்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் இதனை தொடர்ந்து, ஈரானின் பதில் குறித்தும் சர்வதேசத்தில் பதற்றநிலை அதிகரித்துள்ளது. ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய பின்னர், ஈரான் மேலும் இரு ட்ரோன்களை குறித்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரபிக் கடலில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலை நெருங்கி வந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.
அமெரிக்க கடற்படை இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய புரட்சிகர காவற்படையின் எக்ஸ் தள பதிவில் இந்த தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

