மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரிலும், கிராமத்திற்குள்ளும் இரண்டு காட்டுயானைகள் இன்று (13) அதிகாலை 6 மணியளவில் ஊடுருவி பெண் ஒருவரை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தௌள்ளார்.
சம்பவத்தில் வாழைச்சேனை நகரில் ஊடுருவிய போது இடியப்பம் விற்றுக்கொண்டு வந்த 68 வயது மூதாட்டி காட்டுயானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கிராமத்திற்குள் நுழைந்த 2 காட்டுயானைகள் மேற்கொண்ட தாக்குதலில் மொத்தமாக 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்தார். படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த காட்டுயானைகளை காட்டிற்கு விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் யானை ஊருக்குள் ஊடுவியமை மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.
