இலங்கை தேசிய அடையாள அட்டை தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கமைய முதல் டிஜிட்டல் அடையாள அட்டை 2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது செலவை குறைப்பதோடு நவீன தொழிநுட்ப வசதிகளையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் தங்களது டிஜிட்டல் அடையாள அட்டையை 'e-Locker' என்ற செயலி மூலம் அணுகலாம். இது QR குறியீடு மற்றும் முக அங்கீகார வசதிகளைக் கொண்டிருக்கும்.

டிஜிட்டல் முறையில் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு அச்சிடப்பட்ட அட்டைகளும் வழங்கப்படும். புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வந்த பிறகும், தற்போதுள்ள பழைய தேசிய அடையாள அட்டைகள் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

டிஜிட்டல் முறை அடையாள அட்டை - இலங்கையில் வரவுள்ள புதிய நடைமுறை | E Locker Enough Nic Card Is Not Required Sri Lanka

மக்கள் உடனடியாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. இதற்கான மென்பொருள் தளம் தயாரானதும், மாகாண சபைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் தரவு சேகரிப்பு பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.