அதிர்ந்தது மற்றுமொரு பாடசாலை-மாணவர்கள் உட்பட 34 பேர் பலி

தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் கொல்லப்பட்டனர்.  அந்த நபரின் சகோதரி அதே பாடசாலையில் படித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  துப்பாக்கி ஏந்திய அந்த நபர், சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரியைக் கண்டித்த ஆசிரியரைத் தேடிக்கொண்டு இருந்தார்.  சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பாடசாலைக்கு சீல் வைக்கப்பட்டு, முழுப் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர் பல மாணவர்கள், ஆசிரியர்களை பணயக்கைதிகளாகப் பிடித்தார். இன்னும் பல மாணவர்கள் பாடசாலைக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ஒரு பாதுகாப்பு காவலர், தாக்குதல் நடத்தியவர் பாடசாலை அதிபரையும் சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தார். சிறப்புப் படைகள், மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன. தாக்குதல் நடத்திய நபருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. அவரது அடையாளம் தெரியவில்லை. பொலிஸார் முழுப் பகுதியையும் சுற்றி வளைத்து நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். தாக்குதலுக்கு முன்பு, பாடசாலைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் இருப்பதாகவும், அவரது தாயாருக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்துவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. துப்பாக்கிச் சூட்டின் போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாடசாலையை விட்டு ஓடிக்கொண்டிருந்தனர். தாக்குதல் நடத்தியவர் எத்தனை மாணவர்கள், ஆசிரியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தார் என்பது தெரியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.