வடக்கு, கிழக்கில் வீடற்ற 13,069 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள். 🏠🏠🏠
வீட்டுத் திட்டத்திற்கான நிதியுதவி ரூ. 2 மில்லியனாக அதிகரிப்பு.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னும் வீடுகள் இன்றி தவிக்கும் 13,069 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டப்படும். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கருத்திற்கொண்டு, ஒரு வீட்டிற்கு வழங்கப்பட்ட ரூ. 9 இலட்சம் நிதியுதவி தற்போது ரூ. 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது.
