பிரான்ஸில் சிறுமி துஸ்பிரயோகம் குற்றசாட்டில் தேடப்பட்டு வந்த இலங்கை த் தமிழர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த இலங்கையர், சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆட்கடத்தல் செயற்பாடுகளை இலக்காகக்கொண்டு இன்டர்போல் வரலாற்றிலேயே முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையின்போது குறித்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
