மீகொடை பகுதியில் தங்க நகைகளை திருடிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 25 50 000 ரூபாய் பெறுமதியுடைய தங்க நகைகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய மீகொடை பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேக நபர் மீகொடை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் தெரியவந்துள்ளது
சந்தேக நபரிடமிருந்து 4 தங்க நெக்லஸ்கள் 3 மோதிரங்கள் 1பதக்கம் 18 770 ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை அடகு வைத்த 3 சீட்டுக்கள் ஆகியவை கைப்பற்ற பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொன்டுவருகின்றனர்
