ஓரின சேர்க்கைக்கு அழைத்து இளைஞனுக்கு சிறுவர்கள் செய்த சம்பவம் ; வழங்கப்பட்ட நூதன தண்டனை

 

இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு அழைத்து இளைஞரிடம் பணத்தை கொள்ளையிட்ட சிறுவர்களுக்கு நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியுள்ளது, 

திருப்பூரை சேர்ந்தவர் தொழிலாளி ஒருவர், தனது தொலைபேசியுள்ள செயலி மூலம் ஓரின சேர்க்கைக்கு விருப்பம் தெரிவித்து, அதில் உள்ள எண்களை தொடர்பு கொண்டுள்ளார்.அந்த செயலியில் இருந்த நபர்கள், அந்த இளைஞரை தொடர்பு கொண்டு அருகில் பகுதிக்கு வரும்படி அழைத்த போது அந்த இளைஞர் தனது மோட்டார்சைக்கிளில் அங்கு சென்றுள்ளார்.

அங்கு ஏற்கனவே காத்திருந்த 5 சிறுவர்கள் அந்த இளைஞரை தாக்கி அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள், தொலைபேசி, பணம் என்பவற்றை பறித்துக்கொண்டு விரட்டி விட்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் நல்லூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததன்பேரில் 15, 16, 17 வயதுடைய சிறுவர்கள் 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கூட்டுக்கொள்ளை குற்றத்துக்கு 17 வயது, 15 வயது சிறுவர்கள் 2 பேருக்கு 6 மாதம் செங்கல்பட்டில் உள்ள அரசினர் சிறப்பு இல்லத்தில் தங்க வைத்து அவர்களுக்கு செயல்திறன் மனநல ஆலோசனை அளிக்கவும், அவர்களின் தகுதி, திறமைக்கு ஏற்ப தொழிற்கல்வி அளிக்க வேண்டும்.

15 வயது, 16 வயதுடைய 3 சிறுவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தேவையான அளவுக்கு மனநல ஆலோசனை அளிக்கவும், இதை திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக நன்னடத்தை அலுவலர் அறிக்கை அளிக்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.