வேத ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். யோகத்தின் போது சூரியனும், குருவும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருப்பார்கள். இப்படிப்பட்ட யோகம் மார்ச் 05 ஆம் திகதி உருவாகவுள்ளது.சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
மிதுனம்
குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்தாலும் நல்ல வெற்றியைப் பெறலாம். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். முக்கியமாக சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள்.
சிம்மம்
குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் ஆளுமைத்திறன் மேம்படும். சமூகத்தில் உயர் நிலையில் இருப்போரின் நட்பு கிடைக்கும். நீண்ட காலமாக ஒரு முடிவுக்காக காத்திருந்தால், இந்த யோக காலத்தில் அது தெரியும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
மீனம்
குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்கள் பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்ங்கள் கிடைக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.



