நீலத்தை சொந்த மண்ணிலே அடித்து துவைத்து காயப்போட்ட சிவப்பு மண்ணின் படை வீரர்கள்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (19) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க 62 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 44 ஓட்டங்களையும், குஷல் பெரேரா 22 ஓட்டங்களையும், குஷல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். 

அதற்கமைய 179 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.