கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை


2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பீபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளைக் காரணம் காட்டி முன்னெடுக்கப்படும் விசா மோசடிகள் குறித்து கனடா அரசாங்கம் இலங்கையர்கள் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2026 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக "பீபா விசா" (FIFA Visa) என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் விசேட சுற்றுலா விசாக்களோ வழங்கப்படமாட்டாது என கனடா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.கனடாவிற்குள் நுழைவதற்கு சாதாரண சுற்றுலா விசா (Visitor Visa) அல்லது இலத்திரனியல் பயண அங்கீகாரம் (eTA) மாத்திரமே அவசியமாகும்.

முக்கியமாக, உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக வழங்கப்படும் இந்த சுற்றுலா விசாக்களைக் கொண்டு கனடாவில் வேலை வாய்ப்புகளைப் பெறவோ அல்லது நிரந்தர வதிவிட உரிமையைக் கோரவோ முடியாது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

கனடா செல்வதற்கு விசா பெற்றுத் தருவதாக உறுதியளிக்கும் குடியேற்ற முகவர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.