தாழமுக்கத்தின் தற்போதைய நிலை என்ன

 

தற்போது கிழக்கில் குறைவடைந்து காணப்படும் மழை வீழ்ச்சி அடுத்துவரும் மணித்தியாலங்களில் தீவிரமடையக் கூடும்..

வடக்கிலும் மழைக்கு வாய்ப்பு.!

அம்பாந்தோட்டைக்கு தெற்கே காணப்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு திசையில் அரபிக்கடல் நோக்கி நகர்ந்துவருகின்றது.

இதன் விளைவாக, தற்போது கிழக்கு மாகாணத்தில் குறைந்து காணப்படும் மழையானது அடுத்துவரும் மணித்தியாலங்களில் தீவிரம் பெறக்கூடுமென எதிர்வுகூறப்படுகிறது.

தொடர்ந்தும் தாழ்வு பகுதியானது நாளையதினம் இலங்கையின் வடக்கு மாகாணம் ஊடாக, வெப்ப நீராவி நிறைந்த கிழக்கு காற்றை ஈர்க்கும் என்பதால், மழைவீழ்ச்சியானது வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் வரை விரிவடையக்கூடும்.

மேலும், தென்கிழக்கு வங்காளவிரிகுடாவில் இந்தோனேஷியா அருகே உருவான புதிய காற்று சுழற்சியொன்று அடுத்த 48 மணித்தியாலங்களுள் வடக்கு, வடமேற்கு திசையில் இலங்கையின் வடகிழக்கு நிலப்பரப்பை நோக்கி முன்னேறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வடக்கு மாகாணம் முழுவதும் அடுத்துவரும் 3 நாட்கள் விட்டுவிட்டு மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதுடன், சுழற்சியானது வலுவடையும் பட்சத்தில் 2 திகதி ஞாயிறு அளவில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கிம் கரையோர மாவடங்களில் 50 மிமீ வரையான குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் கணிக்கப்படுகின்றது.

இவற்றை கருத்தில் கொண்டு வடக்கில் நெல் அறுவடை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை திட்டமிட்டு மாற்றியமைப்பது பாதுகாப்பானதாக அமையும்.!


19.02.2026 - 01.30PM

செந்தில் குமரன்

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.