களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, மேல், சப்ரகமுவா, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.மழையுடன் கூடிய வேளைகளில் பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், மின்னல் பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
