கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் குழு மோதலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பயங்கர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.காதல் விவகாரமே இந்தக் கொலைக்கான காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களைக் கைது செய்யப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
