பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளாவிய எரிவாயு விலைகள் மற்றும் சர்வதேச சந்தைகளின் அழுத்தம் இருந்த போதிலும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக விலைகளை நிலையானதாக வைத்திருக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு மாவட்டத்தில் லிட்ரோ 12.5 கிலோகிராமின் விலை 3690 ஆகவும், 5 கிலோகிராமின் விலை 1482 ரூபாவாகவும், 2.3 கிலோகிராமின் விலை 694 ரூபாவாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அண்மையில் லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டிருந்தன.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தத்தின்படி, 4,250 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,330 ரூபாவாகும்.
அதேபோன்று 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,742 ரூபாவாகும்.
