கிரகங்களின் தளபதியான செவ்வாய் பெப்ரவரி 23ஆம் திகதி பெயர்ச்சி அடைகிறார். சனி ராசியான கும்பத்தில் செவ்வாய் நுழைகிறார்.
இதனால், 12 ராசிகளின் வாழ்க்கையிலும் எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வரும். இந்த மாற்றம் நேர்மறையானதாக இருக்கும். எனவே, எந்தெந்த ராசிகளுக்கு செவ்வாயின் பெயர்ச்சியால் நேர்மறையான ஆற்றலை பெறுவார்கள் என்பது குறித்து பார்ப்போம்

நேர்மறையான பலன்
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மிகவும் சவாலானதாக இருக்கும். அவர்கள் தொழில், வேலை விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்னை வர வாய்ப்புள்ளது. இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும், உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். தொலைதூர பயணங்களின் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நிதி சிக்கல்கள் ஏற்படலாம்.
விருச்சிகம்: கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சொத்து சம்பந்தமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளில் உங்களுக்கு எதிராக தீர்ப்புகள், உத்தரவுகள் வரலாம். குடும்பத்தில் நெருக்கமானவர்களிடம் பிரச்னை ஏற்படலாம். பணம் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் வீண் விவாதத்தை தவிர்க்க வேண்டும். நண்பர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்.
கும்பம்: கும்ப ராசியின் லக்னத்தில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது. இதனால், கும்ப ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றல் ஏற்படலாம்.பணம் விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அவசரமாக முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். கடின உழைப்பிற்கு ஏற்ற லாபம் உங்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும்.