புனாணை விபத்தில் ரிதிதென்னவை சேர்ந்த குடும்பஸ்தர் பலி
சற்று முன் ஓட்டமாவடி - கொழும்பு வீதியில் புனாணை இராணுவ முகாமுக்கு முன்னாள் இடம்பெற்ற மஹேந்திரா சிறிய ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் ரிதிதென்னையைச்சேர்ந்த சம்சுதீன் முஹம்மது நவாஸ் என்பவர் இஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப்பயணித்த மஹேந்திரா சிறிய ரக மீன் லொறியுடன் ஓட்டமாவடியிலிருந்து ரிதிதென்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


