மார்ச் 6 ஆம் திகதி சனிப்பெயர்ச்சி; அதிஸ்டம் பெறவுள்ள ராசிகள்

 

2026 வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதன்படி மார்ச் 6-ம் தேதி காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

தமிழகத்தில் அமைந்துள்ள திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருநள்ளாறில் சனி பகவாந் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள். நவக்கிரகங்களில் ‘ஈஸ்வரன்’ என்ற பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான். நீதிமானான சனி பகவான், நாம் செய்யும் கர்மவினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர்.

வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி (வாக்கியப் பஞ்சாங்கப்படி) சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு என்ன பலன்களைத் தரப்போகிறது? செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? எனபதை அறிந்துகொள்வோம்.

மீனம் : ஜென்ம சனி தொடங்குகிறது. உடல்நலத்தில் கவனம் தேவை. அலைச்சல் இருக்கும், ஆனால் உழைப்பிற்கு ஏற்ற உயர்வு உண்டு.

கும்பம் : பாத சனி (ஏழரை சனியின் கடைசி கட்டம்). பணவரவு இருக்கும் ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

மேஷம் : விரய சனி (ஏழரை சனி ஆரம்பம்). சுப விரயங்கள் ஏற்படும். முதலீடுகளில் கவனம் தேவை. வெளியூர் பயணங்கள் அனுகூலம் தரும்.

சிம்மம் : அஷ்டம சனி. வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

ரிஷபம் : லாப ஸ்தானத்தில் சனி. தொட்டது துலங்கும். பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

மிதுனம் : தொழில் ஸ்தானம் வலுபெறும். பதவி உயர்வு மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னி : கண்டக சனி விலகுகிறது. திருமண தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

விருச்சிகம் : அர்த்தாஷ்டம சனி விலகுகிறது. மன நிம்மதி கிடைக்கும். பூர்விக சொத்து பிரச்சனைகள் தீரும்.

தனுசு : அர்த்தாஷ்டம சனி (4-ம் இடம்). சுக ஸ்தானத்தில் சனி இருப்பதால் தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

மகரம் : தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வழியில் நன்மைகள் நடக்கும்.

துலாம் : ருண ரோக சத்ரு ஸ்தானம். எதிரிகள் விலகுவார்கள். கடன் பிரச்சனைகள் குறையும்.

கடகம் : பாக்கிய சனி. தந்தை வழி உறவில் நன்மை ஏற்படும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

சிறப்பு பரிகார தலங்கள் மற்றும் பூஜைகள்

 பரிகாரத் தலங்கள்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் உலகப்புகழ் பெற்ற இத்தலத்தில், நள தீர்த்தத்தில் நீராடி, எள் தீபம் ஏற்றி வழிபட்டால் ஏழரை சனி, அஷ்டம சனி ஆகியவற்றின் தாக்கம் குறையும். சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார்.

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில், சனி பகவான் சுயம்புவாக (தானாகத் தோன்றியவர்) அருள்பாலிக்கிறார். இங்கு லிங்க வடிவில் இல்லாமல், தனி உருவமாக அருளுவது சிறப்பு.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.