திடீரென கதறி ஓடிய மக்கள் சற்றுமுன் வரை 35 பேர் சடலமாக மீட்பு


நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று மாலை 6:00 மணியளவில் துப்பாக்கிதாரிகள் சிலர் குவாராவில் உள்ள வோரோ கிராமத்துக்குள் நுழைந்து, கடைகளுக்கு தீ வைத்துள்ளனர். 

மேலும், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று காலை சுமார் 35 சடலங்கள் மீட்கப்பட்டது என அந்நாட்டு கைமா பிராந்தியத்தின் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சையது பாபா அகமது தெரிவித்தார். 

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பலர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர் என்றும், இன்னும் பல சடலங்கள் கிடைக்கலாம் என்றும், பாரம்பரிய மன்னர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். 

குறித்த தாக்குதல்களுக்கு பயங்கரவாதக் குழுக்களே காரணம் என்று அந்நாட்டு அரசாங்கம் குற்றம்சாட்டியது.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.