காதலை எதிர்த்த உறவினரின் உயிரை பறித்த 15 வயது சிறுமி
திருச்சி அருகே சிவசுப்பிரமணியன் என்பவரை காதல் தகராறு காரணமாக 25 வயது இளைஞர் இரும்பு ராடால் அடித்துக் உயிரை பறித்தார்.. இதற்கு உதவிய 15 வயது சிறுமி, தம்பி உட்பட 4 பேரை சிசிடிவி மற்றும் போன் அழைப்புகள் மூலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற இந்த ம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள காவல்காரன் பட்டியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (51). இவர் பாரத் கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 19ஆம் தேதி இரவு அவர் தனது வீட்டின் வராண்டாவில் கயிற்றுக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, 20ஆம் தேதி அதிகாலை தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
மணப்பாறை டிஎஸ்பி காவியா மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தடையயியல் துறையினர் மற்றும் மோப்பநாய் 'நிலா' மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
அருகில் இருந்த வீட்டில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, 20ஆம் தேதி அதிகாலை 1:20 மணிக்கு ஒரு நபர் இரும்பு ராடுடன் அடையாளத்தை மறைத்தபடி வந்து சென்றது பதிவாகியிருந்தது.
அந்த உருவ ஒற்றுமையின் அடிப்படையில், அதே ஊரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (25) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தேடினர்.
ராதாகிருஷ்ணன், சிவசுப்பிரமணியனின் உறவினரான 15 வயது சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இந்தக் காதல் விவகாரத்தை அறிந்த சிவசுப்பிரமணியன், அந்தச் சிறுமியைக் கண்டித்ததோடு, காதலை கைவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் சிவசுப்பிரமணியனை இரும்பு ராடால் அடித்துக் கொன்தாக செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இக்கொலைக்கு அந்த 15 வயது சிறுமி தூண்டுகோலாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
சம்பவத்திற்ககுப் பிறகு ராதாகிருஷ்ணனைத் தப்பிக்க வைக்கவும், தாக்குவதற்கு பயன்படுத்திய பொருட்களைப் பதுக்கி வைக்கவும் அவரது தம்பி சேரன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிவநேச செல்வன் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
பெங்களூருவில் பதுங்கியிருந்த ராதாகிருஷ்ணனை செல்போன் எண் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். தற்போது ராதாகிருஷ்ணன், அந்தச் சிறுமி, சேரன் மற்றும் சிவநேச செல்வன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
