சக்தி வாய்ந்த சதுர்கிரகியோகம்-இன்றைய ராசிபலன்{14.2.2026}

 

இன்று பிப்ரவரி 14, 2026 மாசி மாதம் 2ம் தேதி சனிக் கிழமை, தனுசு ராசியில் பூராடம் பின் உத்திராடம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். 


இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று முக்கிய கிரகங்களின் சேர்க்கை கும்ப ராசியில் 4 கிரகங்களின் சேர்க்கை உள்ளதால் சதுர்கிரகி யோகம் உருவாகிறது. நடக்கிறது. 


இது தொழிலில் முன்னேற்றமும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று ரிஷபம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.


மேஷ ராசி பலன்

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய திறமையையும் ஆளுமையும் பிரகாசிக்கும். உங்களுடைய பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்கள் எதிரிகளால் சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகும். இன்று சமூகத்தில் உங்களுக்கு மரியாதை. அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் சரியாக பட்ஜெட் போட்டு செயல்படவும். மேலும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று எந்த ஒரு செயலிலும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் அணுகுவது அவசியம். இன்று நீங்கள் அரச மரத்தின் கீழ் விளக்கேற்றிய வழிபடவும்.


ரிஷப ராசி பலன்

ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று வேலை அல்லது வீடு இடமாற்றம் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை அளிக்கும். இன்று உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் சில சிரமங்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று எந்த ஒரு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இன்று உங்கள் மதிப்பு குறைய கூடிய சூழல் ஏற்படும். அதனால் இன்று எதிலும் நிதானமாக, நேர்மறை சிந்தனையுடன் ெ. இன்று குடும்பத்தில் பெரியவர்களின் அனுபவ வழிகாட்டுதல் நன்மை பயக்கும். உங்களுடைய தொழில் வியாபாரம் நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தீவிரமான கண்காணிப்பு தேவை. நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை.


மிதுன ராசி பலன்

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று ஆன்மீகம் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களுடைய மனதில் அமைதி நிலவும். இன்று நீங்கள் செய்யக்கூடிய வேலை அல்லது தொழிலில் புதிய வாய்ப்புகள் திறக்கும். இன்று உங்களுடைய முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பது அவசியம். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் வர வாய்ப்பு உண்டு. இன்று கணவன் மனைவி இடையே உணர்ச்சி ரீதியாக இணக்கமான சூழல் ஏற்படும். இன்று நீங்கள் மனரீதியாக உடல் ரீதியாகவும் பலமாக உணர்வீர்கள்.


கடக ராசி பலன்

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் வேலையில் கவனம் தேவை. சிலருடைய ஆதரவு உங்களுக்கு நன்மை பயக்கும். கிரக நிலைகள் இன்று உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்களுடைய முயற்சிகளை மேம்படுத்த வேண்டிய நாள். திறமையை மேம்படுத்தவும் வெளிப்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும். சிலரிடம் முக்கியமான உரையாடல் அல்லது சந்திப்பு மனதில் புதிய தெம்பு பிறக்க செய்யும். அதே சமயம் பிறர் கூறக்கூடிய ஆலோசனைகளை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வதையும் தவிர்க்கவும். முக்கிய பணிகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்கவும்.


சிம்ம ராசி பலன்

சிம்மராசி சேர்ந்தவர்களுக்கு கடந்த கால அனுபவங்கள் இன்று உங்களுக்கு உதவும்.இன்று உங்கள் வாழ்க்கை முறையில் சில முக்கிய மாற்றங்களை செய்ய விரும்புவீர்கள். அவசர முடிவுகள் எடுப்பது, செயல்படுவதையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் குடும்பத்தில் அனைவரையும் மனச எடுத்து செல்லவும். பணியிடத்தில் சரியான திட்டமிடலுடன் செயல்படவும். மேலும் யாருடைய செல்வாக்கிற்கும் அடிபணிய வேண்டாம். இன்று நீங்கள் உங்களுடைய கொள்கையின் அடிப்படையில் மட்டும் செயல்படுவது நல்லது. தொழில் ஒவ்வொரு செயலையும் மேற்பார்வை இடுவது நல்லது. குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.


கன்னி ராசி பலன்

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான பார்வையுடன் அணுகுவீர்கள். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையை ரசித்து செய்வீர்கள். அதே சமயம் மாலை நேரத்தில் பணி சுமையாக உணர்வீர்கள். நீங்கள் நினைத்துவிடத்தில் அனைத்து பணிகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். நாளின் தொடக்கத்தில் முக்கிய பணிகளை முடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவும். இன்று உங்கள் ரகசியங்களை யாரிடமும் செல்வதை தவிர்க்கவும்.


துலாம் ராசி பலன்

துலாம் ராசி வந்தவர்களுக்கு நேர்மறையான மனநிலையை மற்றும் சமநிலையுடன் எதையும் அணுகுவது நல்லது. இன்று அனைத்து பணிகளையும் திட்டமிட்டு முறையில் தொடங்குவீர்கள். இன்று பிறரின் ஆதரவு பயனுள்ளதாக இருக்கும். உங்களுடைய நேரத்தை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல் இன்று ஒரு கருத்தையும் கவனமாக வெளிப்படுத்துவது நல்லது. இல்லை எனில் சர்ச்சைக்கு வழிவகுக்கும். இன்று உங்களுடைய வருமானம் மற்றும் செலவு அதிகமாக வாய்ப்பு உண்டு. ஊடகத்துறை, குழந்தை படுத்துதல் போன்ற துறையில் நல்ல வெற்றி எதிர்பார்க்கலாம்.


விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றும் விதத்தில் சில பொருட்களை வாங்க நினைப்பீர்கள். குடும்ப சூழ்நிலை மேம்படுத்தும் முயற்சிகள் வெற்றி தரும். சண்டை வீட்டாருடன் கருத்து வேறுபாடுகள், மோதல்களை தவிர்க்கவும். குழந்தைகள் தொடர்பான செயல்பாடுகள் இன்று உங்களுடைய நாளை பரபரப்பாக வைத்திருக்கும். சொந்த தொழில் செய்யக்கூடியவர்கள் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்களுக்கு ஓரளவு கை கொடுக்கும்.


தனுசு ராசி பலன்

தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு புதிய பொருள் அல்லது சொத்து வாங்கும் திட்டங்களில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்கள் பிள்ளைகளின் செயல்பாடு மற்றும் அவர்களின் வெற்றி வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று ஏதேனும் ஒரு ஆன்மீக விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உங்கள் நிதி நிலையை பட்ஜெட் போட்டு கவனிப்பது அவசியம். இன்று உங்கள் திட்டமிட்ட  எதிர்பார்த்த விதத்தில் முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்களுடைய நம்பிக்கையும் சுயமரியாதையும் குறைய விடாமல் பார்த்துக் கொள்ளவும்.


மகர ராசி பலன்

மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய நிதிநிலை மேம்படுத்த பல வாய்ப்புகள் தரும். உங்களுக்கான வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளவும். தொழில் செய்யக்கூடியவர்கள் சந்தைப்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளில் சிறப்ப கவனம் செலுத்துவது நன்மை பயக்கும். இன்று பிறரையும் நம்புவதை விட உங்கள் சொந்த திறனில் கவனம் செலுத்தி செயல்படவும். இன்று உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய நிதானமான அணுகுமுறை நன்மை தரும்.


கும்ப ராசி பலன்

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று முக்கியமான பணிகளை முடிக்க நல்ல வாய்ப்புகள் ஏற்படும். விடாமுயற்சியுடன் செயல்பாடு நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரும். சமூக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சில நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களின் செயல் உங்கள் மனதை புண்படுத்தும். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்தவும். வேலை தேடக்கூடியவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையலாம். பணியிடத்தில் முதலாளிகள் மற்றும் மேலதிகாரிகளின் எதிர்பார்ப்புகளை திருப்திப்படுத்த வாய்ப்பு உண்டு.


மீன ராசி பலன்

மீன ராசி பிறந்தவர்களுக்கு இன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தவறான புரிதல் தீரும். உங்களுடைய உறவின் சூழ்நிலையில் படிப்படியாக சாதகமாக மாறும். இன்று உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் எடுக்கும் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்த போதிலும் வீடு மற்றும் உங்கள் துணை உடன் நேரம் செலவிட நேரம் ஒதுக்குவீர்கள். இன்று கோபம் மற்றும் மனக்களர்ச்சியால் இருந்து ஒரு முடிவு எடுப்பதை தவிர்க்கவும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பதோடு, விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.