லியங்கஹவெல, மாபிட்டிய கல் குவாரியில் பணியாற்றி வந்த இரு தொழிலாளர்கள் இன்று (14) அங்கு மேற்கொள்ளப்பட்ட வெடிவைப்பின் போது மண் மற்றும் கற்களுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
பண்டாரவளை - பூனாகலை வீதியின் 16-17 கிலோமீற்றர் தூண்களஞக்கு இடையில் இந்தக் கல் குவாரி அமைந்துள்ளது.உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டெடுப்பதற்காக இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
