ருமேனியாவில் நடந்த கோர விபத்து 7 பேர் பலி.
ருமேனியாவில் நடந்த வேன் விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததாக ருமேனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று வியாழக்கிழமை லியோன் மற்றும் PAOK இடையேயான யூரோபா லீக் போட்டியைக் காண 10 பேரை ஏற்றிக்கொண்டு கிரேக்கத்திலிருந்து பிரான்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேனே ட்ரக்குடன் மோதி சிதறியுள்ளது
இவ் விபத்தில் 7 பேர் சம்பவ இடத்தில் பலியானதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
