வாகனங்களின் விலைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு

 

  இலங்கையின் வாகன சந்தையில் கடந்த டிசம்பர் மாதத்தில் வாகனப் பதிவு நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின் மொத்த வாகனப் பதிவுகள் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்தநிலையில் BYD 408 வாகனங்களைப் பதிவு செய்து முன்னிலை வகிக்கின்றது. இதனையடுத்து BAW இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது டிசம்பரில் 247 E7 சிற்றூந்துகளைப் பதிவு செய்ததே இதற்குக் காரணம். மேலும் Toyota மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான வாகனங்களைப் பதிவு செய்துள்ளது. Wigo சிற்றூந்துகளின் (185) பெரும் பங்களிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதற்கிடையில், பயன்படுத்தப்பட்ட சிற்றூந்துகளின் பதிவு நவம்பரில் 2,910 ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 3,857 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 95% ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

இந்த வாகனங்களுக்காக நிதி வசதி (Leasing) பெற்றவர்களின் விகிதம் 52.8% ஆகும். இதன்படி Suzuki 1,446 வாகனங்களைப் பதிவு செய்து முன்னிலை வகித்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.

அத்துடன் வேகன் ஆர் (Wagon R) 1,026, ஸ்பேசியா (Spacia) 227 மற்றும் ஆல்டோ (Alto) 115 பதிவு செய்துள்ளது. மேலும் டொயோட்டா (Toyota) 1,021 வாகனங்களைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.