அகதிகள் தேசத்தில் தொடரும் ஈழத்தமிழரின் அசிங்கம்- மனைவியை இலங்கை கூட்டி வந்து கட்டி போட்டு அடித்து உதைத்து விட்டு நகை-கடவுச்சீட்டுடன் பறந்த முல்லைத்தீவு கணவன்

 

கணவனின் சொல்லை மீறி பாடசாலை நண்பர்களுடன் தொடர்பை பேணிய மனைவியை இலங்கைக்கு கூட்டிவந்து தாக்குதல் நடத்திவிட்டு, கணவர் - மனைவியின் கடவுச்சீட்டையும் எடுத்துக்கொண்டு பிரன்ஸிற்கு சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும், கணவன் முல்லைத்தீவை பின்புலமாக கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது.

மனைவியின் நண்பர்களால் பிரான்ஸ் வாழ் தமிழ் குடும்பத்தில் களேபரம்; இலங்கை வந்த கணவன் அதிரடி! | French Wife Friends Caused Turmoil Tamil Family

இவர்கள் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில், மனைவியின் பாடசாலை நட்புகளால் குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

பாடசாலை நண்பர்களின் நட்பை துண்டிக்குமாறு கணவன் வற்புறுத்தியும் , மனைவி அதனை காதில் வாங்காது நட்பை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியின் தாயாருக்கு 50 ஆவது பிறந்தாளை சர்ப்பிரைஸாக கொண்டாடலாம் என கூறி மனைவியுடன் இலங்கைக்கு வருகை தந்த கணவன் , கொழும்பில் வீடு ஒன்றை எடுத்து தங்கியுள்ளார்.

இதன்போது மனைவியின் பாடசாலை நண்பர்கள் விவகாரம் மீண்டும் சச்சரவை ஏற்படுத்திய நிலையில், கணவன் ஆத்திரமடைந்து மனைவியை தாக்கியதாக கூறப்படுகின்றது.

அதோடு மனைவியை வீட்டிற்குள் கட்டிவைத்ததோடு, பெண்ணின் பாஸ்போர்டையும், அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் எடுத்துகொண்டு பிரான்ஸ் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

பெண்ணின் சத்தம் வந்ததை அடுத்து வீட்டு உரிமையாளர்கள் கதவை திறந்து பார்த்தபோது பெண்னை கண்டு அதிர்ச்சியடைந்து , உடனடியாக பெண்னை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.        

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.