தற்போது தாழமுக்கம் ஆழ்ந்த தாழமுக்கமாக மாறி நகர ஆரம்பித்துள்ளது
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் "ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக" வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வருகின்றது. தொடர்ச்சியாக வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது புயலுக்கு முந்திய நிலைமையாகும்.
தற்போது இதன் மையம் அதிக சுழற்சியை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றது.
எனவே இது அடுத்த கட்ட தீவிரத்தை அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கிழக்கு, ஊவா, மத்திய, வட மத்திய தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை நாளை முதல் இன்னமும் தீவிரம் பெறும். செறிவடையும்.
வடக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் கிடைத்து வரும் மழை இன்று பல பகுதிகளுக்கும் பரவலடையும், செறிவடையும் அத்தோடு தீவிரமும் பெறும்.
படிப்படியாக காற்றின் வேகமும் அதிகரிக்கும்.
ஆகவே இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் அவதானமாக இருப்பதோடு, இந்த அதி தீவிர வானிலை நிலைமை தொடர்பாக உரிய அதிகாரிகளும் முன்கூட்டியே செயற்படுவது சிறந்தது.
- நாகமுத்து பிரதீபராஜா -
