கடந்த திங்கட்கிழமையிலிருந்து, இன்று வரை (16) தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
