இலங்கை கடல் ஒன்றில் நேர்ந்த விபரீதம்- இளம் கணவன் பலி-தவிக்கும் கர்ப்பிணி மனைவி

 புத்தளம், மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்வில, மோதரவெல்ல பகுதியில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவர் குருநாகல், வேவரவு பகுதியைச் சேர்ந்த 38 வயதான நலிந்த சதுரங்க அனுருத்த மெண்டிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அலுவலக பணியாளர்களுடன் நேற்று முன்தினம் வெஹெர பகுதியில் இருந்து பேருந்தில் சிலாபம் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சுற்றுலா சென்ற தந்தைக்கு நேர்ந்த துயரம் - அதிர்ச்சியில் கார்ப்பிணி மனைவி | Father Of One Drowned In The Sea Off Modara

இதன்போது தல்வில பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது திடீர் அலையில் சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அலைகளில் சிக்கிய 47 வயதுடைய ஒரு பெண்ணையும் அவரது 16 வயது மகளையும் அங்கிருந்த வெளிநாட்டு குழுவொன்று மீட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு நிலை காரணமாக உயிரிழந்தவர் மீது எந்த கவனமும் செலுத்தப்படவில்லை. எனினும் குழுவில் அவர் காணவில்லை என்பதை அறிந்து கொண்டு கடலில் மூழ்கியவரை தேடிப் பிடித்துள்ளனர்.

உடனடியாக மாரவில ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மனைவி தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.