கொழும்பில் ரகசியமாக தொடரும் அந்தரங்க தொழில்- பல அழகிகள் சிக்கினர்

 கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேளையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஏழு பெண்கள் மற்றும் இரண்டு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மஹர நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தேடுதல் பிடியாணை அடிப்படையில் பொலிஸார் இந்த சோதனைகளை மேற்கொண்டனர்.

மஹர மற்றும் கிரிபத்கொட பகுதிகளில் இரண்டு சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டன.

கொழும்பில் நள்ளிரவில் அதிரடி சோதனை - இளம் பெண்கள் கைது | Massage Centre Roundup And 7 Arrested In Colombo

மஹர மசாஜ் நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பெண்கள் மற்றும் கிரிபத்கொட மசாஜ் நிலையத்தின் மேலாளர் மற்றும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த மசாஜ் நிலையங்களில் கைது செய்யப்பட்ட பெண்கள் 24 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாகும்.

அவர்கள் பொகவந்தலாவை, பேராதெனிய அம்பகஸ்தோவ, கோகரெல்ல, ஹோமாகம, களனி மற்றும் ரன்பொகுணகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.