அரச வைத்தியசாலையில் பெண்ணின் சடலத்துடன் உடலுறவு-சிக்கிய இளைஞன்

சடலத்துடன் உறவு கொண்டவர் கைது!

அரசு மருத்துவமனை பிணவறையில் பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக நிலேஷ் பில்லாலா (25) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 18, 2024 அன்று கக்னர் சமூக சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு ஒக்டோபர் மாதத்தில் மருத்துவமனை ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்தச் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.

சிசிரிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்ட பில்லாலா நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை மையத்திற்குள் நுழைந்து, சடலத்தை ஸ்ட்ரெச்சரில் இருந்து இழுத்து, கேமராவின் பார்வையில் படாதவாறு ஒரு மூலைக்குக் கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு சடலத்தை மீண்டும் ஸ்ட்ரெச்சருக்கு அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இந்தக் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுதியது. இந்நிலையில் மருத்துவ அதிகாரி டாக்டர் ஆதியா தாவர் என்பவர் October 7, 2025, கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி அளித்த புகாரின் பேரில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து நிலேஷ் பில்லாலாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இந்தியா மத்தியப் பிரதேசத்தின் புர்ஹாள்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.