மெக்சிக்கோவின் தெற்கு மாகாணமான குரேரோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலநடுக்கமானது 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குரேரோ மாநிலத்தின் சான் மார்கோஸ் நகருக்கு அருகில், பிரபலமான சுற்றுலாத் தலமான அகாபுல்கோவிற்கு அருகில் குறித்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.
வலுவான நிலநடுக்கம் இருந்தபோதிலும், இதுவரை எந்த உயிரிழப்புகளோ அல்லது கடுமையான காயங்களோ பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், நிலநடுக்கத்தின் விவர நிலைமையை மதிப்பிடுவதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
