இந்த ஆட்சியைக் கவிழ்க்க எம்மால் முடியாது. அதற்குரிய பணியை மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும். ஓர் அரசின் நிலைத்தன்மையும் நீடித்த ஆட்சியும் உண்மையில் மக்களிடமே உள்ளது. அதாவது அரசின் ஆயுள் என்பது மக்களின் கைகளிலேயே உள்ளது.
அரசின் ஆயுள் காலம் ஐந்து எனக் கூறப்பட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியை அதற்கு முன்னரே மக்கள் கவிழ்த்தார்கள்.
எனவே, அரசின் ஆயுள் என்பது மக்களின் கைகளிலேயே உள்ளது. நாடு முன்னால் உள்ள சவால்களை தேசிய மக்கள் சக்தி அரசு எதிர்கொண்டால் நல்லது. ஆனால் அதற்குரிய சாத்தியம் உள்ளதா என்பது சந்தேகமே"
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன
