பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, பெண் பொலிஸ் அதிகாரி 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அம்பகஸ்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
