சவுதி - வாகன விபத்தில் இந்திய குடும்பத்தினர் 4 பேர் மரணம்
சவுதிஅரேபியா : மதினா - ஜித்தா நெடுஞ்சாலையில் நேற்று நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
கேரள மாநிலத்தைச் சார்ந்த 7 பேர் ஒரே வாகனத்தில் பயணம் செய்யும் போது மற்றொரு வாகனத்தில் மோதி விபத்து நடந்துள்ளது.
ஜித்தாவில் வசித்துவரும் மலப்புரத்தைச் சேர்ந்த ஜலீல் (52), அவரது மனைவி தஸ்னா (40), ஜலீலின் தாயார் மற்றும் மகன் அதீல் (13) ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.
ற்றவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
