மருதங்கேணியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற பேருந்துடன் மோதிய மகேந்திரா வாகனம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்று காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வீதியின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்தின் மீது மிக வேகமாக வருகை தந்த மகேந்திரா வாகனம் மோதியே இந்த விபத்து பதிவாகியுள்ளது
இதன் போது பேருந்தும்,விபத்தை ஏற்படுத்திய மகேந்திரா வாகனமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது
மகேந்திரா வாகனத்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்
சம்பவ இடத்திற்கு வருகைதந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
விபத்தை ஏற்படுத்திய மகேந்திரா வாகனம் ஒலி ஒளி சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் தான் இந்த விபத்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




