2025 ஆம் ஆண்டுக்கான A/L பரீட்சையின் மீதமுள்ள பகுதியை ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த முடிவின்படி, ஜனவரி 12 ஆம் திகதி தொடங்கும் உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாட வினாத்தாள்களை ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்த பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக நாடு முழுவதும் உள்ள பரீட்சை மையங்கள் மீண்டும் தயார் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
