திகட்டாத திங்கள்-இன்றைய ராசிபலன்{5.1.2026}

 

திங்கட்கிழமை, 5 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. மனோபயம் மற்றும் தூக்கக் குறைவு ஆகியவை ஏற்படும். பொருட்களை பத்திரமாக பாதுகாப்பது அவசியம். வயிற்று உபாதைகள் எழலாம்
ரிஷபம்
taurus-rishibum
அனைத்துச் செயல்களிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். உல்லாசமான சுற்றுலாப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
மிதுனம்
gemini-mithunum
கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. துன்பம் வந்த போதினிலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
கன்னி
virgo-kanni
தனவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கிய மேம்பாட்டால் ஆனந்தம் பெருகும். பிரிவால் ஏற்பட்ட துன்பம், இணைவால் மாறும். இல்லத்தில், இரு கரையும் புரண்டோடும் சந்தோஷம்.
மகரம்
capricorn-magaram
குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். சாஸ்திர ஆராய்ச்சியும், அதில் தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர் பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.
கடகம்
cancer-kadagam
குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். புதுப்புது ஆராய்ச்சிகள், அதில் தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர் பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.
சிம்மம்
leo-simmam
பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். தேவையுள்ள பொருட்கள் மட்டும் வாங்கிச் செலவுகளைக் குறையுங்கள். புதிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தேவையற்ற அலைச்சல்கள் தவிர்க்க முடியாததாகும்.
துலாம்
libra-thulam
அரசு ஆதரவு, பெரியோர் உதவி, உத்தியோக வாய்ப்பு என நன்மை தரும் நன்னாள். முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். தன்னம்பிக்கை, தேகதிடம், தைரியம் ஆகியவை ஓங்கும்.
மீனம்
pisces-meenam
தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சியைக் கை விடாது தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி துணிவுடன் செயல்களில் இறங்கினால் வெற்றி உறுதி.
தனுசு
sagittarius-thanusu
அலுவலகத்தில் அதிகாரிகள் சொல் கேட்டு பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். கோவில், குளம் பணிகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலாப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
கும்பம்
aquarius-kumbam
தனவரவு அதிகரிக்கும். எதிரிகள் அடி பணிவர். ஆரோக்கியம் மேம்படும். பயண சுகம் ஏற்படும். தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.