வரலாற்றில் முதல் முறை 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டிய தங்கத்தின் விலை

 

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.

தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது இதுவரை பதிவான அதிகூடிய தங்க விலையாகக் கருதப்படுகிறது.இதற்கிடையில், முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5,400 அமெரிக்க டொலர் வரை உயரக்கூடும் என்று கணித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவையே இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.

அதேபோல், வெள்ளி மற்றும் பிளட்டினம் விலைகளும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.