ஞாயிற்றுக்கிழமை, 4 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
மனையாளின் ஒத்துழைப்பு மட்டற்ற மகிழ்ச்சி தரும். தனவரவு கூடும். புதிய முகநூல் நண்பர்கள் சேர்க்கையால், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
வீட்டிலும் வெளியிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிலர் துக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள நேரலாம். கல்வியில் தடைகள் ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை.
மிதுனம்
gemini-mithunum
நன்கு உடை உடுத்தி, நாகரீகமாக, மிடுக்காக மற்றவர்களை கவரும் வண்ணம் நடந்துகொள்வீர்கள். உங்கள் தேஜஸ் கூடும். தேவைக்கு அதிகமாகவே தனவரவு உண்டாகும்.
கன்னி
virgo-kanni
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம், பணியில் இருப்பவர்களுக்கு பதவிவுயர்வு கிடைக்கும்.
மகரம்
capricorn-magaram
பயணத்தில் சுகானுபவங்கள் ஏற்படும். தேவை ஏற்படும் போது நண்பர்கள் மறுக்காது உதவி செய்வார். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
கடகம்
cancer-kadagam
இடமாற்றங்கள் ஏற்படலாம். மங்கையரால் ஏற்படும் மாறாத செலவுகளால் பணமுடை ஏற்பட்டுக் கடன் பெறும் சூழ்நிலை உருவாகலாம். உண்ணவும் நேரமின்றி உழைக்க நேரிடும்.
சிம்மம்
leo-simmam
இன்று விருப்பங்கள் யாவும் நிறைவேறும். அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆதரவால் முன்னேற்றம் கிடைக்கும். நம்பிக்கைக்கு உரிய நல்லவர்களின் நிரந்தர நட்பு கிடைக்கும்.
துலாம்
libra-thulam
வியாபாரப் பயணங்கள் மூலம் வெற்றி கிட்டும். புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் எண்ணம் எழும். நிரந்தர மதநம்பிக்கை ஏற்படும். தொழில் புரிவோருக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும்.
மீனம்
pisces-meenam
எடுக்கும் காரியங்கள் அனைத்தும் ஏனோ தானோ என முடிக்கும் சூழ்நிலை உருவாகும். இயலாமை காரணமாக இல்லத்தில் உள்ளவர்கள் மீது ஏற்படும் எரிச்சலை குறைத்தால் மகிழ்ச்சி நிலவும்.
தனுசு
sagittarius-thanusu
இனிய பேச்சாலும் சாதுர்யத்தால், எடுத்த காரியங்கள் யாவற்றிலும். வெற்றி அடைவது உறுதி, அனைவரையும் கவர்வீர்கள். புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. பிறருக்கு எப்போதும் நல்லதே நினையுங்கள். அதிகாரிகள் ஆணையை ஏற்று நடந்தால் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செல்லவும். எல்லாவிதத்திலும் செலவுகள் கூடும்.
