அபுதாபியில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட நால்வர் பலி
அபுதாபியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் மற்றும் அவர்களின் வீட்டுப் பணியாளர் என நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரளா, மலப்புறம் பகுதியைச் சேர்ந்த அப்துல் லத்தீஃப் என்பவரது பிள்ளைகளான அஷஸ் (14), அம்மார் (12), ஆயாஷ் (5) மற்றும் அவர்களது வீட்டுப் பணியாளர் புஷ்ரா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்
அபுதாபி லீவா விழாவில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அப்துல் லத்தீஃப் மற்றும் அவரது மனைவி ருக்ஸானா ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய இரு பிள்ளைகளும் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் நல்லடக்கம் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
